Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத்த தகராறில் சமையல் பாத்திரம் எடுத்து தாத்தா வீசியதில் 10 மாத குழந்தை பலி வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படை வேப்பங்காடு என்ற பகுதியைச் சார்ந்தவர் வெங்கடாசலம். இவருக்கும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த அமுதா என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமண நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் குடிப்பதற்கு அடிமை ஆகி வீட்டில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் எடுத்து விற்பனை செய்து அதில் வரும் பணத்தைக் கொண்டு மது அருந்தி சுற்றி வருகிறார். இந்நிலையில் இவர்களின் மூத்த மகள் மோனிஷா பவானியைச் சேர்ந்த மயிலானந்தன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் மோனிஷாவிற்கு ஜோஸ்விக் என்ற 10 மாத கைக்குழந்தை உள்ளதால் தனது அம்மா வீட்டிற்கு கடந்த 10 தினத்திற்கு முன்பு வந்துள்ளார்.

இதனைக் கண்ட வெங்கடாஜலம் என் வீட்டிற்கு எதற்கு வந்தாய்? என மகளை அடித்து துன்புறுத்தி உள்ளார். இது குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் விசாரணை செய்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை மோனிஷா தனது குழந்தைக்கு மின்சார அடுப்பு மூலம் பால் காட்சி கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த வெங்கடாஜலம் என் வீட்டில் எதற்கு இருக்கிறாய்? எனக்கூறி பால் காச்சிய மின்சார அடுப்பை எடுத்து உடைத்ததுடன் பால் காய வைத்த பாத்திரத்தையும் எடுத்து வீசிவிட்டு மோனிஷாவை தாக்கி கீழே தள்ளி உள்ளார். கை குழந்தையுடன் இருந்த மோனிஷா தடுமாறி சுவற்றில் சாய்ந்து நிற்கையில் அருகில் இருந்த அலுமினிய பாத்திரத்தை எடுத்து வீசி உள்ளார். அந்த பாத்திரம் குழந்தை ஜோஸ்விக்கின் தலையில் பட்டு குழந்தை மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக மோனிஷா தனது தாயாரை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறும் பொழுது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து உடனடியாக மோனிஷா இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதுடன் சமையல் பாத்திரங்களை கைப்பற்றியும் வெங்கடாஜலத்தை கைது செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!