பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தஞ்சையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பின்னர், ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, தஞ்சை கீழவாசல் அண்ணா திருமண மண்டப மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இணைந்து கூட்டுத் தொழுகையில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
