Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆலத்தூர் தாசில்தார் அதிரடி: இரூர் கல்குவாரியில் விதிகளை மீறி இயங்கிய ராட்சத பொக்லைன் எந்திரம் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் கூத்தனூர் செல்லும் சாலையில் கல்குவாரி செயல்படுகிறது. இந்த கல்குவாரிக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கற்களை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக கல்குவாரியில் பொக்லைன் வாகனம் மூலம் பாறைகள் உடைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து கடந்த 25-ம் தேதி ஆலத்தூர் தாசில்தார் கவிதாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் விரைந்து சென்று கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கல்குவாரியில் மாலை 6 மணிக்கு மேல் பொக்லைன் எந்திரம் மூலம் கற்களை உடைத்து கொண்டிருந்தனர். தாசில்தார் கல்குவாரிக்குள் இறங்கி சென்று பார்த்ததும், அங்கிருந்து தொழிலாளிகள், பொக்லைன் ஆபரேட்டர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து கல் உடைக்க பயன்படுத்திய ராட்சத பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 நாட்களாக பொக்லைன் வாகனத்தை ஓட்டுவதற்கு ஆப்ரேட்டர் மற்றும் போதிய வாகன வசதிகள் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று பொக்லைன் வாகனம் கல்குவாரியில் இருந்து கொண்டுவரப்பட்டு, பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக இரூர் கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!