கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு(ராமநகர்) மாவட்டம் பீடி காலனியை சேர்ந்தவர் முகமது காசிம்(27). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவரும், இளம்பெண் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு தெரியவரவே அவர்கள் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் செய்து வைத்தனர்.
பின்னர் அந்த பெண் பெங்களூரு பேடராயனபுரா பகுதியில் வசித்து வந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் திருமணத் துக்கு பிறகும் இவர்களது காதல் தொடர்ந்துள்ளது. மேலும் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்தும் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். முகமது காசிம் தனது கள்ளக்காதலியை சந்திக்க அடிக்கடி பெங்களூருவுக்கு வந்துள்ளார்.
அவர் அடிக்கடி வருவது குறித்து அறிந்த பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினரும், முகமது காசிம் பற்றி பெண்ணிடம் விசாரித் தபோது, அவர் தனது உறவுக்காரர் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரை அடிக்கடி வர வேண்டாம் என்று கண்டித்தும் அந்த பெண் அவர்களின் பேச்சை கேட்காமல் முக மது காசிமை வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். இதனால் அவர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந்தநிலை யில் கடந்த 25-ந் தேதி முகமது காசிம் பேடராயனபுரா பகுதியில் உள்ள தனது கள்ளக்காதலி வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கவனித்த கணவர் குடும்பத்தினர் முகமது காசிம் பெண்ணின் வீட்டுக்குள் இருந்தபோது கையும், களவுமாக பிடித்தனர். மேலும் அவரை சாலைக்கு இழுத்து வந்து உருட்டு கட்டை, கற்கள் மற்றும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலை அருகில் இருந்தவர்கள் தடுத்து முகமது காசிமை அனுப்பி வைத்தனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த அவர் ராமநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக முகமது காசிம் இறந்தார். இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர் குடும்பத்தினர் 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
