திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. நடை அடைக்கும் முன்பே அமைச்சர் கோயிலுக்குள் வந்ததற்கான சிசிடிவி ஆதாரம் உள்ளது எனவும் அமைச்சர் வருகையால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது.
