திருச்சி மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் மணப்பாறையை சேர்ந்த கவின் (வயது 21) என்ற வாலிபர் மது விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த
திருச்சி காஜா பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது செலர்ஸா (வயது 23) உறையூர் பகுதியைச் சேர்ந்த முகமது சைப் (வயது23) பீமநகர் பகுதியில் சேர்ந்த ஜான் போஸ்கோ (வயது20), ஆகிய 3 பேரும் திருவரங்கம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 27) ஆகிய 4 ரவுடிகள் சேர்ந்து கடந்த 28-ந்தேதி கவின்யிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கவினை பிளேடால் கிறியும், கைகளால் தாக்கி உள்ளனர். பிறகு போலீசார் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி பிளேடால் கிழித்து தற்கொலை செய்து கொள்வதாக நான்கு பேர் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இதுகுறித்து சிறை அதிகாரி ராஜேஷ்கண்ணாகே.கே நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.சம்பவத்தில் காயமடைந்த கவின் மத்திய சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
