திருச்சி எடமலைப்பட்டி புதூர் டோபி காலனி சேர்ந்தவர் தேவராஜ் வயது 50 இவருக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளன. முதல் மனைவியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில் இரண்டாவது மனைவி திடீரென்று இறந்து விட்டார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தேவராஜ் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடி பார்த்தும் அவரது தந்தை எடமலைப் பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
