கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு துறை அரசு அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், அதிகாரி ஒருவரை இறக்கிவிடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த அரசு இன்னோவா வாகனத்தின் மீது, பின்னால் வந்த மற்றொரு அரசு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
வாகனங்கள் குறைந்த வேகத்தில் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், வாகனத்தில் லேசான சேதம் மட்டுமே ஏற்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அரசு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
