Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரியலூர் புதிய கலெக்டராக மிருணாளினி பதவியேற்பு..

அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த திரு.ரத்தினசாமி IAS இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அரியலூர் மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக திருமதி. மிருளாணி IAS இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு பல்துறை அரசு உயர் அதிகாரிகள் மலர்க்கொத்து தந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய மாவட்ட ஆட்சியர் திருமதி.மிருணாளினி…

முன்பு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்ததினால், அரியலூர் மாவட்டத்தை பற்றி ஓரளவு தெரியும். அரியலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தகல் வன பரப்பை அதிகரிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் திட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

அதேபோல் பெண் குழந்தைகளின் முன்னேற்றம், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் கிடைத்துள்ள அரிய கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் மற்றும் அதன் எச்சங்களை அறிந்து கொள்ளும் வகையிலும், மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு உலக புகழ் பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் ஆகியவற்றை கண்டுணரவும் வகையில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!