Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அதிமுக நிர்வாகி தற்கொலை… 55 லட்சம் நிதியுதவி.. இபிஸ் பேட்டி..

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்தின் மகளின் கல்வி செலவு தொகை முழுவதையும் அதிமுக ஏற்கும் எனவும், இவரது குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் 30லட்சமும், தஞ்சை

மாவட்ட அதிமுக சார்பில் 25 லட்சமும் என மொத்தம் 55 லட்சம் வழங்கப்படும் எனவும் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் அருகே உள்ள வளையல்காரத் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் மகேந்திரன் (37). இவர் திருப்பனந்தாள் கடை வீதியில் டிகேஎஸ் என்ற பெயரில் பூக்கடை நடத்தி வருகிறார். இவர் அதிமுக தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராக உள்ளார்.

தற்போது அதிமுக இரண்டாகப் பிரிந்து இருப்பதாலும் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருவதாலும் பொறுத்துக் கொள்ள முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு திடீரொன தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அதிமுக இணைய வேண்டும் மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க வேண்டும் எனவும் தன்னுடைய இறப்புக்கு பிறகாவது அதிமுக இணைந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் எனவும் தனது இறுதி சடங்கிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தனது சமூக வலைதளம் மூலம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவத குறிப்பிட்டு வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்து கொண்ட மகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது தொடர்ந்து அவரது இல்லத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் ஒ எஸ் மணியன் காமராஜ் முன்னாள் எம்எல்ஏக்கள் பவுன்ராஜ் முன்னாள் எம்பி தஞ்சை மாவட்ட கழக செயலாளர் பாரதி மோகன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிச்சாமி பின்னர் பேசுகையில் இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக் கூடாது இந்த இழப்பு கட்சிக்கு பேரிழப்பாகும் கட்சியின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து சிறப்பான முறையில் செயலாற்றி அனைத்து நிலைகளிலும் கட்சி வளர அரும்பாடு பட்டவர் இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஒரு வயது மகளின் கல்வி செலவு முழுவதையும் அதிமுக ஏற்கிறது எனவும் அதிமுகவின் சார்பில் 30 லட்சமும் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 25 லட்சமும் என மொத்தம் 55 லட்சம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் எனவும் கூறினார்.

error: Content is protected !!