Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே 34 வயது ஆண் சடலம் மீட்பு.. பரபரப்பு

மணவாசி சுங்கச்சாவடி அருகே உள்ள ஐயப்பன் கோவில் அமைந்துள்ள தாமரை பூக்குளத்தில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், மணவாசி சுங்கச்சாவடி அருகே உள்ள ஐயப்பன் கோவில் பகுதியில் உள்ள தாமரை பூக்குளத்தில் இன்று காலை ஆண் ஒருவரின் உடல் மிதந்ததை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினரை வரவழைத்து, பாதுகாப்புடன் குளத்தில் இருந்து ஆண்

சடலத்தை மீட்டனர். விசாரணையில் இறந்த நபர் சண்முநிதி வயது 34 என்பது தெரிய வருகிறது.
உயிரிழந்த நபரின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலையா? அல்லது வேறு யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா ,நேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு

ஆறுதல் கூறி, போலீசாரிடம் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்த திடீர் மரணம் மணவாசி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!