திருச்செந்தூர் அருகே ரூ.72 லட்சம் மோசடி செய்த வழக்கில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டார். ஏரல் தவெக நகரசெயலாளர் ராஜாவின் வீட்டை ரூ.90 லட்சத்துக்கு வாங்க கோபி என்பவர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஆனால் வீட்டை விற்பனை செய்வதாக கூறி ரூ.72 லட்சம் பணத்தை பெற்று கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறி ராஜா மீது கோபி புகார் அளித்துள்ளார்.
முன்னதாக கிரைய ஒப்பந்தம் செய்ய முன்பணமாக ரூ.72 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு ராஜா கூறியிருக்கிறார். மேலும் மீதமுள்ள ரூ.18 லட்சத்தை உங்கள் பெயருக்கு பத்திர பதிவு செய்து தரும் போது கொடுங்கள் என கோபியிடம் ராஜா கூறியிருக்கிறார். இதனை நம்பி ராஜாவின் வங்கி கணக்கிற்கு ரூ.72 லட்சத்தை கோபி செலுத்தியுள்ளார்.
ஆனால் ரூ.72 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு அதோடு தவெக நிர்வாகி ராஜா தலைமறைவாகி விட்டதாக போலீசில் கோபி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
