அரியலூர் மாவட்டம் செந்துறை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகள் சித்ரா. இவர் புதுக்கோட்டையில் 3-ஆம் ஆண்டு வேளாண்மைப் படிப்பு (அக்ரி) படித்து வருகிறார்.
இந்நிலையில், விடுமுறைக்காகப் பெற்றோரைக் காண அரியலூருக்கு வந்துள்ளார். பின்னர், தனது தந்தை ராமர் மற்றும் சிவசாமி ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

இதில், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி அவர் உயிரிழந்தார்.
இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து உள்ளிட்ட பிற வாகனங்கள் செல்ல அனுமதி அளித்த அவர்கள், டிப்பர் லாரிகளை மட்டும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும், சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்வதாகவும், அதி வேகமாக செல்வதாவும் அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
