குளித்தலை அருகே மேல குறப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டு பேர் மூணாறுக்கு சுற்றுலா சென்று விற்று இன்று காரில் வீடு திரும்பியுள்ளனர்.
கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலக்குறப்பாளையம் என்ற இடத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் கார் சாலையோர பள்ளத்தில் தலை

குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த எட்டு இளைஞர்களில் ஆறு இளைஞர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
பலத்த காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சந்தோஷ் என்ற இளைஞர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் போதே சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதில் படுகாயம் அடைந்த கிஷோர், கார்த்திக், ரிஷி

கண்ணன், ராசி, சுதர்சன் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த சந்தோஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பிரேதக்கடங்கில் வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து குளித்தலை டிஎஸ்பி பொறுப்பு பாலகிருஷ்ண பிரபு மற்றும் லாலாபேட்டை காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அரசு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
