மின்வெட்டு பிரச்னையை திசை திருப்ப ஹார்ட் டிஸ்க்குகள் மாயமானதாக கூறுகிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை. ஆட்சி மாறலாம், ஆனால் அதிகாரிகள் மாற மாட்டார்கள் என்றார். மேலும், ஆடத் தெரியாதவர்கள் வீதி கோணல் என்பார்கள். அது போல் அமைச்சர்கள் பேசி வருகின்றனர். மின்வெட்டை சரி செய்வது தொடர்பாக இதுவரை ஒரு ஆய்வுக் கூட்டம் கூட நடக்கவில்லை . மின்வெட்டு பற்றி தகவல் தெரிவிக்க உதவி எண் 2021லேயே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. புதிதாக உதவி எண் கொண்டு வந்ததுபோல் தவெக அமைச்சர்கள் பேசுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.ஹார்டு டிஸ்க்குகள் மாயம் என்பது மின்வெட்டு பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
