தவெக நிலைப்பாடு காரணமாக 25 எம்எல்ஏக்கள் உட்பட 32க்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தார். அந்த வகையில் திருச்சி மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த சீனிவாசன் நீக்கப்பட்டார்.
இந்தநிலையில் அதிமுகவில் இருந்த கழக அமைப்புச் செயலாளர்
வெல்லமண்டி N நடராஜன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெல்லமண்டி N.ஜவஹர்லால் நேரு , மாவட்டக் கழக துணை செயலாளர் பத்மநாதன், பகுதி கழக செயலாளர்கள் ஏர்போர்ட் பகுதி (தெ)கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி, உறையூர் பகுதி கழக செயலாளர் பூபதி (எ) பூவேந்திரன், ஜங்ஷன் பகுதி கழக செயலாளர் நாகநாதர் பாண்டியன், மாவட்ட அணி செயலாளர்கள்;- மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்
ரஜினிகாந்த் மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் லோகநாதன்
மாவட்ட அணி நிர்வாகிகள்;- வழக்கறிஞர் அணி இணை செயலாளர்
முல்லை சுரேஷ் , வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சசிகுமார், சிறுபான்மை அணி இணை செயலாளர் ஷாஜகான், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் புத்தூர் ரமேஷ்தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் நாகராஜ் , மாவட்ட மாணவர் அணி தலைவர்
நாகு, மாவட்டக் கலை பிரிவு இணைச் செயலாளர் கிஷோர் குமார், இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை வினோத், மாவட்ட அண்ணா தொழில் சங்க இணை செயலாளர் ஏர்போர்ட் செல்வம், மாவட்ட நிர்வாகிகள்;- டாக்டர் தமிழரசி சுப்பையா
சுப்பையா பாண்டியன், தென்னூர் ராஜா , நாட்டாமை சண்முகம், மாதவன் , கௌசல்யா
நிர்மலா , பிரித்திவிராஜ் , அழகரசன் விஜய், முதலியார் சத்திரம் அருண்குமார் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். மேலும் சீனிவாசனுக்கு பதிலாக திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளராக முன்னாள் ஆவின் சேர்மேன் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று உறையூர் பகுதி நிர்வாகிகள் கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கார்த்திகேயன் பேசுகையில்.. நான் மற்றவர்கள் போல் காசு கொடுத்து மாவட்ட செயலாளர் பதவியை வாங்கவில்லை என பேசினார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே இருந்த மாவட்ட செயலாளர்கள் பணம் கொடுத்து பதவி வாங்கியது போலவும், தற்போது தனக்கு மட்டும் பணம் வாங்காமல் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பேசியதாக நிர்வாகிகள் புலம்புகின்றனர். ஏற்கனவே எடப்பாடிக்கு நெருக்கமான இளங்கோவன் மூலமாக பலரும் பணம் கொடுத்து பதவி வாங்கியதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் கார்த்திக்கேயனின் இந்த பேச்சு எடப்பாடியின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
