Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செங்கிப்பட்டியில் 1284 கிலோ தடை செய்த புகையிலை பறிமுதல் – 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி நவலூர் கட் ரோடு அருகே செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் வாகன சோதனையில் ஈடுபட்டிந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை மறித்து ஆய்வு செய்தபோது அதில் 1284 கிலோ ஹான்ஸ் , விமல் , கூலிப் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1284 கிலோ ஏற்றி வந்தது தெரியவந்தது . உடனடியாக அவற்றை பறிமுதல் செய்தவுடன் அதை கொண்டு வந்த சேலம் பிரபாத் பகுதியைச் சேர்ந்த மணி மகன் சுதாகர் (30) மற்றும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சித்தம்பூண்டி பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் மனோஜ் குமார்( 38) ஆகிய இருவரையும் கைது செய்து செங்கிப்பட்டி ஸ்டேஷன் கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

error: Content is protected !!