Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனைவியை வெட்டிவிட்டு.. 5 வயது குழந்தையுடன் கணவன் தலைமறைவு..

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே மயில் பாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் தர்மராஜ் – அட்சயா தம்பதியினர். இவர்களுக்கு 5ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்டுகளுக்கு மு

ன்பு தான் பட்டுக்கோட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடி வந்துள்ளனர். இவர்கள் திருச்சியில் வசித்த போது அட்சயாவிற்கு வேறு நபருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் – மனைவி இருவரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோல் நேற்று மீண்டு கணவனுக்கும் – மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவியை முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி வெட்டு குழந்தையுடன் தலைமறைவாகி உள்ளார்கள். படுகாயமடைந்த மனைவி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மராஜ் மற்றும் அவருடன் உள்ள குழந்தையை தேடி வருகின்றனர்‌.

இந்நிலையில் வேறு ஒரு நபருடன் அட்சயா வீட்டில் இருந்த போது அதனை செல்போனில் தர்மராஜ் வீடியோ ‌எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் மனைவியை வெட்டியுள்ளதாகவும் – மேலும் தனது குழந்தையுடன் சாக போவதாகவும் பேசி வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!