Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரப்பான் பூச்சி போராட்டம்: ஜந்தர் மந்தரில் லட்சம் பேர்

சுப்ரீம் கோர்ட்டில் போலி தொழில்முறைப் பட்டங்கள் மற்றும் இணைய விமர்சனம் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், சில வேலையில்லாத இளைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் அமைப்பின் விமர்சகர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுள்ளார். இதற்கு இளைஞர் சமுதாயத்தில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு கொண்ட பல இளைஞர்கள் இதனை எதிர்த்தனர்.

இதனை மராட்டிய மாநிலம் சம்பாஜி நகரைச் சேர்ந்த அபிஜித் தீப்கே என்ற 30 வயது இளைஞர் வேடிக்கையாக எதிர்கொண்டார். நீதிபதி குறிப்பிட்ட கரப்பான் பூச்சி என்ற வார்த்தையைக் கொண்டு ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு தளத்தை உருவாக்கி நையாண்டி கருத்துகளை (மீம்ஸ்) பதிவிடத் தொடங்கினார். இதற்கு இளைஞர் வட்டத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. சில நாட்களிலேயே பல லட்சம் பேர் அதில் இணைந்தனர். இதன் செயல்பாடுகள் தீவிரம் அடைந்ததால் அந்த வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் இளைஞர்கள் பல இடங்களில் கரப்பான் பூச்சி முகமூடிகளை அணிந்து வெளிப்படத் தொடங்கினர்.

இதற்கிடையே சி.பி.எஸ்.இ. தேர்வு டிஜிட்டல் மதிப்பீடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்ற குறைபாடுகளை கரப்பான் பூச்சி அமைப்பினர் கடுமையாக எதிர்த்தனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் மாதம் 6-ந்தேதி (அதாவது நேற்று) ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதி பெறும் நடவடிக்கைகளை கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் சவுரவ் தாஸ், விஜேதா தஹியா ஆகியோர் மேற்கொண்டனர். கட்சி நிறுவனரான அபிஜித் தீப்கே அமெரிக்காவில் இருந்தார். ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாளில் இந்தியா வருவதாக தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் ஆர்ப்பாட்ட நாளான நேற்று காலை ஜந்தர் மந்தரில் அந்த கட்சியினர் குவியத் தொடங்கினர். கூட்டம் தொடக்கத்திலேயே வராததால் பலரும் இதனை கிண்டலாக விமர்சித்தனர். நேற்று காலை வரை ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கிடைக்காமல் இருந்தது.இதற்கிடையே அபிஜித் தீப்கே டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நாடாளுமன்ற தெரு போலீசார் மாலை 5 மணி வரை ஆர்ப்பாட்டத்துக்கான அனுமதியை அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் கூட்டம் திரண்டது. சில மணிநேரத்தில் அங்கு பெருங்கூட்டம் கூடியது.இந்த நிலையில் அபிஜித் தீப்கே அங்கு வந்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கும் பங்கேற்று ஆதரவு அளித்தார். இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆப்ஜித் தீப்கே, நேற்று நடைபெற்ற போராட்டம் வெறும் டிரெய்லர்தான். இதோடு அந்த போரட்டம் முடிந்து போவது இல்லை. அடுத்த ஒரு வாரத்திற்குள் தர்மேந்திர பிரதான் நீக்கப்படாவிட்டால் நாங்கள் தரையில் இறங்கி போராடுவோம்.” என்றார்.

error: Content is protected !!