Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி நீதிமன்ற சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மர்ம ஆசாமி ஒருவரிடமிருந்து தகவல் வந்ததது.
அதில், நீதிமன்ற வளாகத்திற்குள் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள், உடனடியாக தங்களது உயர் அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்தவுடன் திருச்சி மாநகர காவல்துரை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு அதிகாரிகள்,போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையில்
நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அங்கு இருந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து
அதிநவீன மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியோடு, வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் போலீசார் நீதிமன்ற அறைகள், விசாரணை அரங்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம் மற்றும் வளாகத்தின் உள் வெளிப்புறப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர்.சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில்
மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டல் வெறும் வதந்தியா அல்லது சதியா என்ற கோணத்தில் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்
சைபர் கிரைம் போலீசார்
மிரட்டல் விடுத்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை வைத்து, அதை அனுப்பிய மர்ம ஆசாமி யார்?என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் தலைமை தபால் நிலையம் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குஇதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!