Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

20 ஆண்டாக உணவின்றி தவித்த முதியவரை மீட்ட சமூக ஆர்வலர்

20 ஆண்டுகளாக சாலையோர வாழ்க்கை உணவும் தண்ணீரும் இன்றி தவித்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சமூக ஆர்வலர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் மற்றும் கடைவீதி பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த வெங்கடேசன் என்ற 65 வயது முதியவர், சொந்த உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் சாலையோரங்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் உணவு , தண்ணீரும் இன்றி எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்த அவர், உணவு உட்கொள்ளவும் தண்ணீர் குடிக்கவும் முடியாமல் மிகவும் பரிதாபமான சூழலில் உயிருக்கு போராடி வந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட சமூக ஆர்வலர் பாக்கியராஜ், முதியவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவசர சிகிச்சைக்காக அனுமதித்தார். சமூக ஆர்வலரின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

error: Content is protected !!