Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நிபந்தனைகளுடன் யூடியூபர் மாரிதாஸுக்கு ஜாமின்..

மதுரையை சேர்ந்தவர் மாரிதாஸ். இவர், யூடியூப் சமூக ஊடகத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில்,அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக யூடியூபர் மாரிதாஸை, சென்னை சைபர் கிரைம் போலீசார் மதுரையில் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவை, ஏஐ புகைப்படத்துடன் சேர்த்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார். அமைச்சர் கீர்த்தனாவின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவருக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களையும், பொய் செய்திகளை பரப்பியதாகவும், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மாரிதாசை நேற்று காலை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து மதுரையில் கைது செய்யப்பட்ட மாரிதாஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சூழலில் தான் இரவு நேரத்தில் மாரிதாஸுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவரை போலீசார் ஆஜர்படுத்தப் போது, விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்கினார். அமைச்சர் கீர்த்தனா குறித்த அவதூறு வழக்கில் கைதான மாரிதாஸ் விடுவிக்கப்பட்டார். ரூ.10,000 ஜாமீன் தொகை மற்றும் ஒரு வாரம் விசாரணை அதிகாரி முன்பு கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்து மாரிதாஸுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கினார்.

error: Content is protected !!