Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை அதிரடி மேல்முறையீடு! 

உச்ச நீதிமன்றத்தை நாடிய இன்பதுரை

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் வழக்கில் புதிய திருப்பமாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்யக் கோரி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?

  • 2016 தேர்தல் களம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவுவும் (தற்போதைய சபாநாயகர்), அதிமுக சார்பில் இன்பதுரையும் போட்டியிட்டனர்.
  • குறைந்த வாக்கு வித்தியாசம்: இதில் 104 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • அப்பாவு தொடர்ந்த வழக்கு: தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக்கூறி இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், அண்மையில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், “இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது; அப்பாவுதான் வெற்றி பெற்றார்” எனத் தீர்ப்பளித்தார்.

மேல்முறையீட்டிற்கு என்ன காரணம்?

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளதாக இன்பதுரை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட விதிகளின்படி, ‘டாக்ட்ரின் ஆஃப் மெர்ஜர்’ (Doctrine of merger) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்ப்பு ஏற்புடையதல்ல என்றும், எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!