Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரத்தநாடு அருகே கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு-மறியல்

ஒரத்தநாடு அருகே இரவு பகலாக கிராவல் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட பின்னையூர் செம்மனேரி பகுதியில் அனுமதி பெற்று கிராவல் மண் அள்ளப்பட்டு வருகின்றது.

நிலையில் பகலில் மட்டுமே மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு இரவு பகலாக கிராவல் மண் அள்ளுவதை கண்டித்து கிராம மக்கள் பேருந்து மற்றும் காவல் மண் அள்ளி வந்த

வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பகலில் அனுமதி பெற்று விட்டு இரவு நேரங்களில் டிராக்டர் லாரி உட்பட பல்வேறு வாகனங்களில் இரவு பகலாக கிராவல் மண் அள்ளிக்கொண்டு ஊருக்குள் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் குழந்தைகளை வைத்திருக்கும் போது மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாக குற்றம் சாட்டினர்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் காவல் அல்லது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு ஏதேனும் ஏற்பட்டிருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

error: Content is protected !!