Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கல்

தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தடகள வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு, வீரர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:
“நமது பகுதி விளையாட்டு வீரர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும். வுழ்த்தி அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும், உறுதுணையையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.”
விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையூட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்த இந்த நிகழ்வில், மாநகரக் செயலாளர் மு.மதிவாணன் பகுதி செயலாளர் நீலமேகம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!