Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2வது மாடியில் இருந்து பெயிண்டர் தவறி விழுந்து பலி-சோகம்

கரூர் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உயிரிழப்பு, போலீசார் விசாரணை.

கரூர் அடுத்த வெண்ணைமலையில் (சேரன் மெட்ரிக்) தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி முதல் மேல்நிலை வகுப்பு வரை இரண்டு தனி தனி வளாகங்கள் அமைந்துள்ளது.

ஆரம்பப் பள்ளி வகுப்புகள் நடைபெறும் வளாக கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற கார்த்தி என்ற இளைஞர் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளி திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் உயிரிழந்த கட்டிட தொழிலாளியின் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவரையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!