Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குடிபோதையில் கார் மோதி: 3பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டை என்ற பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. மாலை பள்ளி முடிந்த நிலையில், மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் ஒன்று சாலையோரம் நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் உலகநாதனை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!