Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

‘முதலில் உங்கள் கட்சியினருக்கு ஒழுக்கம் சொல்லுங்கள்’ – விஜயை விமர்சித்த கனிமொழி

சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து இரவு நேரத்தில் அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை அளித்ததாக த.வெ.க வடக்கு பகுதிச் செயலாளர் வேம்புலி மீது மவுண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.தலைமறைவாக உள்ள வேம்புலியை போலீசார் தேடி வரும் நிலையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக தவெக மாவட்ட செயலாளர் ஏ ஈசிஆர் சரவணன் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி.எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர், தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சில தினங்களுக்கு முன், திருவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கட்சியினர் குற்றவாளிகளை காப்பாற்றப் பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.சினிமா பாணியில் பெயரிட்ட சிறப்புப்படையை அண்மையில் தொடங்கி வைத்து, ‘தனிமனித ஒழுக்கம்’ குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை கூறிய முதல்-அமைச்சர் விஜய் அவர்கள், முதலில் தனது கட்சியினருக்கு அதை சொல்ல வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!