தேர்தல் வாக்குறுதியின்படி கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்பட்ட விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கர்நாடக அரசு மேகதாட்டில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்
சிறு குறு, பெரு, விவசாயிகள் என்று பிரிக்காமல் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்பட்ட விவசாய கடன்களை தேர்தல் வாக்குறுதியின் படி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
