Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை திடாரென ராஜினாமா செய்துள்ளார். இன்று வெளியான இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வந்தார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த இவர், தொகுதி மக்கள் மத்தியிலும் பரவலான அறிமுகத்தைப் பெற்றவர் ஆவார்.

சி.விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை முறைப்படி சமர்ப்பித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இக்கட்டான இந்த அரசியல் சூழலில் அவரது திடீர் ராஜினாமா முடிவு பல்வேறு விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது

சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.”

ன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இந்த ராஜினாமா முடிவு வெறும் ஒரு தொகுதி சார்ந்த நிகழ்வாக மட்டுமில்லாமல், தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்திலும், கட்சி உள்விவகாரங்களிலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் அவரது அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்தான தெளிவான விபரங்கள் வெளிவரலாம்.

📍 புதுக்கோட்டை, ஜூன் 16, 2026 — ETamilNews நிருபர்

error: Content is protected !!