Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய தவெக அரசை கண்டித்து பாஜக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம்,

கராத்தே தியாகராஜன், டால்பின் தர், சதீஷ்குமார், பால்கனகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பிஞ்சுகளின் அலறல் சத்தம் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?. இன்னும் எத்தனை நாள்… இந்த மவுனம் முதல்வரே?. இன்ஸ்ட்டா முதல்வரே ரியல் உலகை பாருங்கள். அறுந்து போய்ச்சு. அறுந்து போய்ச்சு. இன்ஸ்ட்டா ரீல் அருந்து போய்ச்சு. மக்கள் மனம் நொந்து போய்ச்சு என்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ‘‘அரசியல் காரணங்களுக்கான இந்த ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை. பெண்களின் வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு இருக்கிறோம்” என்றார்.

error: Content is protected !!