விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் மூடலால் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில், தவெக அரசைக் கண்டித்து ஆக.,16ல் திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சிவகாசியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இதில் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
