Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விசா கட்டணம் உயர்வு… இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

விசா கட்டணம் உயர்வு... இந்திய மாணவர்கள் அதிர்ச்சி

உயர் கல்விக்காக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மாணவர் விசா கட்டணத்தை இந்திய மதிப்பில் சுமார் ரூ.46,000-ல் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தி ஆஸ்திரேலிய அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன் விசா விதிமுறைகளிலும் கடுமையான புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் உயர்கல்வி கற்பதற்கு இந்திய மாணவர்களின் முதன்மைத் தேர்வாக ஆஸ்திரேலியா விளங்கி வருகிறது. சமீபகாலமாக அந்நாட்டில் அதிகரித்து வரும் புலம்பெயர்வோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உள்கட்டமைப்பைச் சீரமைக்கவும் ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து விசா நடைமுறைகளைக் கடினமாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை விடவும் மிக அதிக மாணவர் விசா கட்டணம் வசூலிக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.

ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, மாணவர் விசா கட்டணம் இருமடங்கிற்கும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அதிரடி கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசா மாற்று முறைகளிலும் புதிய புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, தற்காலிக பட்டதாரி விசா (Temporary Graduate Visa) மற்றும் விசிட்டர் விசா (Visitor Visa) மூலம் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்தவர்கள், இனி அந்நாட்டிற்குள் இருந்தபடியே தங்களது விசாவை மாணவர் விசாவாக (Student Visa) மாற்றியமைக்க விண்ணப்பிக்க முடியாது என்ற அதிரடி கெடுபிடியும் விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிற்குள் நிகழும் விசா முறைகேடுகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!