Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீட் மறுதேர்வு பயத்தால் விபரீதம்: சேலத்தில் 19 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி கோபிகா(19) தற்கொலை செய்து கொண்டார். மறு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மன அழுத்தத்தால் மாணவி கோபிகா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரத்தை சேர்ந்த கோபிகா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2024 ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த கோபிகா ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார். அந்த தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு குளறுபடி சர்ச்சை காரணமாக, மறுதேர்வு அறிவிக்கப்பட்டு வரும் 21ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

அந்த தேர்வை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருந்த மாணவி மன உளைச்சலில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனிமையில் இருந்த கோபிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவியின் சடலத்தை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் குறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!