Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுக்கோட்டையில் வரலாற்றுச் சாதனை: TNSTC-ன் முதல் திருநங்கை பேருந்து ஓட்டுநராக ஸ்ரீதேவி நியமனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகத்தின் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக ஒரு திருநங்கை ஓட்டுநராக பணியில் இணைந்து சாதனை படைத்து வருகிறார் (ஸ்ரீதேவி). சாதனை பயணம் பொதுவாகப் பாரம்பரியமாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கனரக வாகன ஓட்டுநர் தொழிலில் தற்போது பெண்களும், திருநங்கைகளும் தங்களது திறமையால் முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக திருநங்கை ஸ்ரீதேவி பணியில் இணைந்துள்ளார்.

இந்த (திருநங்கை) தினசரி நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தனது கடமையை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார். மேலும் அரசு போக்குவரத்து துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது சமூகத்தில் திருநங்கைகளுக்கான சமத்துவத்தையும், அங்கீகாரத்தையும் உயர்த்தியுள்ளது.
பேருந்தை இயக்கும் இவருக்கு சக ஊழியர்களும், பொதுமக்களும், பயணிகளும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக திருநங்கை கலையரசி நடத்துனராக சேர்ந்துள்ளார். தற்போது திருநங்கை ஸ்ரீதேவி ஓட்டுனராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!