Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அமைச்சர் வினோத் வழிபாடு

கும்பகோணத்தில் அமைச்சர் வினோத் ரவி பேட்டி

முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வேளாண் துறை அமைச்சர் வினோத் கலந்து கொண்டார் .
அப்போது செய்தியாளர்கள் வேளாண் பயிர் கடன் தள்ளுபடியில் விவசாயிகளிடம் திருப்தி இல்லையே என கேட்டதற்கு முதலில் ஐம்பதாயிரம் ரூபாய் தள்ளுபடி செய்தோம், பிறகு 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது படிப்படியாக என்று கூறி பதிலை நிறைவு செய்யவில்லை.

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த தினத்தை முன்னிட்டு வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார் .

அப்போது செய்தியாளர்கள் அமைச்சரிடம் அரசின் வேளாண் பயிர் கடன் தள்ளுபடியில் விவசாயிகளிடையே திருப்தி இல்லையே என கேட்டதற்கு முதலில் 50,000 ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
பிறகு இது 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது .
படிப்படியாக என்று கூறி அந்த கேள்விக்கான பதிலை நிறைவு செய்யவில்லை.
சட்டசபை நிகழ்வுகள் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று சட்டசபை நிகழ்வுகள் நிறுத்தப்பட்டதே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அதில் ஏதும் இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறினார்.
நேற்று இரவு கன மழை பெய்துள்ளது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்வீர்களா? என கேட்டதற்கு இன்று காலை தான் சென்னையிலிருந்து வந்தேன். ஆய்வு செய்வேன் என்றார் .
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்களே, அவர்களிடம் பேசுவீர்களா? என கேட்டதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளேன் அவர்களிடம் இது குறித்து பேசுவேன் என்றார்.

error: Content is protected !!