புதுடெல்லியைச் சேர்ந்த ஸ்ரீசரண் (28) என்பவருக்கும், குருகிராமில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த ராதா காயத்ரிக்கும் (27) சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் தேனிலவுக்காக உத்தரகாண்ட் சென்று, ரிஷிகேஷைப் பார்த்துவிட்டு ஜூன் 14 அன்று இரவு முசோரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.
அன்று இரவு விடிய விடிய மது அருந்திவிட்டு அதிகாலை 3:30 மணியளவில் உறங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை கணவர் கண்விழித்துப் பார்த்தபோது, ராதா காயத்ரி மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் தரையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
