ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி சட்டமன்றத்தில் ஓய்வூதியம் உயர்வு, ஒட்டுமொத்த தொகை உயர்வு, குடும்ப ஓய்வூதியம், ஈமச்சடங்கு தொகை ஆகியவற்றை அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த ஓய்வூதிய உயர்வு அரசாணை நிறைவேற்றப்படவில்லை. இதனை உடன் நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் முதல்வருக்கு கவனயீர்ப்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் முத்துராமன் வரவேற்றார். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பாலகிருஷ்ணன், திரிபுரசுந்தரி, சரளா, ராஜாத்தி, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமு, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் நிறைவுறையாற்றினார். இதில் ஜெயராமன், சூரியகலா, மும்தாஜ் பேகம், சிற்றரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மோகனா பாய் நன்றி கூறினார்.
