கரூரில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தர மறுப்பு பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகள் மற்றும் ஊழியர் மீது தாக்குதல், வைரலாகும் வீடியோ.
கரூர் மாவட்டம், நெரூர் செல்லும் சாலையில் நடேசன் என்பவருக்கு சொந்தமான தனியார்
பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது இன்று பெட்ரோல் பங்கில் உரிமையாளரின் மகள் சிந்தியா மற்றும் ஊழியர் இருவரும் வழக்கம்போல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது, டாஸ்மார்க் ஊழியர் சதீஷ் தனது மனைவியுடன் காரில் வந்து ரூ.2,000 மதிப்பில் பெட்ரோல் நிறுவியதாகவும், பின்னர் பணம் கேட்டபோது பணத்தை தர மறுத்ததால் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த கட்டையை எடுத்து டாஸ்மார்க் கடை ஊழியர் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகளை சரமாரியாக தாக்கியுள்ளார்.
பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மகள் மற்றும் ஊழியர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறையினரிடம் தற்போது வரை புகார் அளிக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் போலீசார் விசாரணைக்கு பின்னரை உண்மை தன்மை குறித்து தெரிய வரும்.
