ராமநாதபுரம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும்போது இருதரப்பு சண்டையில் தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த பெண் தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான செய்திக்குறிப்பில், தலைமைக் காவலர் கண்ணகியின் உயிரிழப்பு காவல்துறைக்கும், அவரது குடும்பத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. கண்ணகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெண் தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி..
