Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவருக்காக பெண் தற்கொலை முயற்சி!

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் , கணவரை மீட்டுத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி பெண், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், மூக்கனாங்குறிச்சி அருகே உள்ள வெள்ளகவுண்டன்பட்டி காலனியைச்

சேர்ந்தவர் தவப்பிரியா, 26. இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், கடந்த நான்கு

மாதங்களுக்கு முன்பு தன்னையும், குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் தவப்பிரியா தெரிவித்துள்ளார்.

இதனால், இரண்டு மகள்களையும் வைத்துக்கொண்டு கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வருவதாகவும், தனது கணவரை அவரது தாயார் மறைத்து வைத்து வேறு பெண்ணுடன் மறுமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும்.

மேலும், தனது பெற்றோரும் உடன் இல்லாத நிலையில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் தவித்து வருவதாகவும், கணவரை மீட்டுத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில்

இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர், அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!
Secret Link