வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டபோதும், அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடைசி முயற்சியாகக் கிம் ஜாங் உன்னுக்கு டிரம்ப் கடிதம் எழுதிய நிலையில், அதை பெற்றுக்கொண்ட வடகொரிய தூதர் திறந்துகூட பார்க்காமல் ஐநா சபை கூட்டத்திலேயே விட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக 2019-ம் ஆண்டில் வடகொரியா சென்ற டிரம்ப், கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல வழிகளில் பேச முயற்சித்த டிரம்ப்: கண்டுகொள்ளாத வடகொரிய அதிபர்
