திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பேருந்து நிறுத்தம் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சங்கர்கணேஷ் (36), மகாராஜன் (37) மற்றும் ராகுல் (25) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சங்கர்கணேஷ் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரும் பொதுச் சொத்து சேத வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீரவநல்லூரில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
