தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வி.பி.ஜி. ராம்ஜி என்ற புதிய சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனுடன், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
