கல்லணை அருகே போடப்பட்ட சாலை பழுதானதால் பொதுமக்கள் அதிர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை தோகூர் – சர்க்கார்பாளையம் சாலையில் 850 மீட்டர் அளவிற்கு வனத்துறையின் பொறுப்பில் இருந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை சாலை அமைப்பதற்காக வழக்குகள் மூலம் பெற்று பொதுமக்கள் தேவைக்காக பெற்று அந்த இடத்தில் உள்ள 850 மீட்டர் அளவிற்கு சாலையை கடந்த சில மாதங்களுக்கு முன் விரிவுபடுத்தி அமைத்தனர். ஆனால் முறையாக சாலை அமைக்கப்படாததால் சாலை அமைத்த ஒரு சில மாதத்திலேயே குண்டும் , குழியுமாக மாறியது. அந்த ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டு முறையாக சாலையை அமைத்து தர கூறியதின் பெயரில் சாலை குண்டும் குழியும் ஏற்பட்ட இடங்களை அகற்றிவிட்டு ஜல்லிகளை மட்டும் கொட்டி விட்டு சென்று விட்டனர்.
மாதக்கணக்கில் தற்பொழுது ஜல்லிகள் மட்டுமே உள்ளதை காண முடிகின்றது . இதனால் அப்பகுதியில் வழியாக செல்லும் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படும் முன் உடனடியாக அந்த இடங்களை சரி செய்து முறையாக சாலை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
