Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுவன் கொலை வழக்கு- பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

சிறுவன் கொலை வழக்கு- பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை

தருமபுரி அருகே கடந்த 2023 ஆம் ஆண்டில் 7 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியான பிரகாஷ் என்பவருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து தருமபுரி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி அசின் பானு, குற்றவாளிக்கு மரண தண்டனைகளுடன் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு தருமபுரி பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. குழந்தபாதுகாப்பு மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், குற்றவாளிக்கு தகுந்த தார்மீகத் தண்டனை கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சூழலில் இந்த இறுதித் தீர்ப்பு வந்துள்ளது.

இந்தக் கொடூரக் குற்றம் தொடர்பாக தருமபுரி காவல்துறையினர் பிரகாஷ் (21) என்ற வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை தருமபுரியில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அனைத்து சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி அசின் பானு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாசித்தார். குற்றவாளி பிரகாஷுக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், கூடுதலாக 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!