மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த பதற்றம் மற்றும் நெருக்கடி காரணமாக, வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு தற்போது முழுமையாக நீக்கியுள்ளது. மேலும், வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கான பல்க் எல்பிஜி (Bulk LPG) விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 50 விழுக்காடு அளவுக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியும், வெளிநாடுகளில் இருந்தான இறக்குமதியும் தற்போது சீராக உள்ளதைக் கருத்தில் கொண்டே மத்திய அரசு இந்த முக்கிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஹோட்டல், உணவகங்கள் மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
