Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும்…ஆர்பி. உதயகுமார் பேச்சு

திருச்சி மாவட்டம் மற்றும் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர், முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்னவேல், திருச்சி மாவட்ட செயலாளர்கள் மனோகரன், கார்த்திகேயன், யோகநாதன், டிஎன் சிவக்குமார், மகளிரணி இணைச் செயலாளர் லீமா ரோஸ் மார்டின் எம்எல்ஏ ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில்
ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர், முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் பேசும் பொழுது
திருச்சி கிழக்கு தொகுதியில் இரட்டை இலை மலரும் அதிமுகவிற்கு வெற்றி ஒன்றும் புதிது அல்ல. தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் இணைந்து எடப்பாடியை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று பேசினார்
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், திருச்சி மாநகர், புறநகர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!