மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 350க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாடு இளைய சமுதாயத்தினரையும் ஆட்கொண்டு விட்டது, போதை கலாச்சாரத்தால் குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில் போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சர்வதேச போதைப்பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான 5 கிமீ விழிப்புணர்வு மாரத்தான் ஒட்டமானது திருச்சியில் இன்று நடைபெற்றது
“ஸ்டார்ட் Run – ஸ்டாப் Drugs” என்ற பெயரில் நடைபெறும், 14வயதிற்கு மேற்பட்பட்டோருக்கான இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தயாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி அண்ணா விளையாட்டங்கில் தொடங்கி டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்த இந்த மாரத்தான் ஓட்டத்தில் 350 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளையோர், மூத்தோர் என அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று ஓடினார்கள். மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது
முன்னதாக, போதை இல்லா தமிழகத்தில் உருவாக்கும் விதமாக கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரும் போதை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
