Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாடகைத் தாய் குழந்தை விவகாரம்-4 வாரத்தில் முடிவு எடுக்க ஆணை

வாடகைத் தாய் (Surrogacy) மூலம் பெற்றுக்கொள்ளப்படும் குழந்தைகளுக்குப் பெற்றோர் உரிமை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் காலதாமதமின்றி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால், அவற்றின் மீது நான்கு வாரங்களுக்குள் உரிய தீர்வு காணப்பட வேண்டும் என அனைத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நாமக்கல் தம்பதியின் மனுவைத் தள்ளுபடி செய்து நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், வாடகைத் தாய் மூலம் பெறப்படும் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் அவர்களின் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பெற்றோர் உரிமை கோரும் மனுக்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முன்னுரிமை அளித்து விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!